Header Ads

03. 12. 2020 இன்றைய இராசிப்பலன்




மேஷம்

இன்று உடன் பணிபுரிபவரை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சற்று மந்தமாக இருந்தாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகவே ஈடுபட முடியும்.

ரிஷபம்

இன்று தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்றே மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் தேக்க நிலை ஏற்படாது. தேவையற்ற பிரச்சினைகள் குறையும். பண வரவுகளும் திருப்தியளிப்பதாக அமையும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சிதரக் கூடிய சுப சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் பூரிப்பு, கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும்.

கடகம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. தொழில் வியாபாரத்திலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைய முடியும். பொன் பொருள் சேரும்.

சிம்மம்

இன்று முன் கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டால் எல்லா வகையிலும் அனுகூலமான பலனைப் பெற முடியும்.

கன்னி

இன்று தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலம் அதிகரிக்கும். பணவரவில் நெருக்கடிகள் விலகும்.பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும்.

துலாம்

இன்று புத்திரவழியில் பூரிப்பு உண்டாகும்.திருமண சுபகாரியங்களை நிறைவேற்றும் வாய்ப்பும் அமையும். நெருங்கியவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. தாராள தனவரவுகள் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாவதற்கான அறிகுறிகள் உண்டாகும்.

தனுசு

இன்று தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான லாபத்தினை பெறுவர். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத உயர்வுகளை பெறுவர்.

மகரம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதியில்லை. பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும்.

கும்பம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு இருந்த வேலைப்பளு குறையும். குடும்பத்திலும் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் பூரிப்பு மகிழ்ச்சி கொடுக்கும்.

மீனம்

இன்று தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் மட்டும் கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது நல்லது. 

No comments

Powered by Blogger.